வியாழன், நவம்பர் 06, 2014

கமலஹாசனின் ரசிகைகள்




ஒல்லிக்குச்சி கமல்
அவள் ஒரு தொடர்கதையில்
எச்சில் விழுங்கிப் பாடுகையில் ரசித்தவள் 
மெச்சி அக்கா...
சப்புன்னு அறைஞ்ச கோபாலக்ருஷ்ணன்
கீதாவின் பிரியன்
நினைத்தாலே இனிக்கும் மைக்
சிம்லா ஸ்பெஷல் மைக்
சேர்ந்து பாட முடியா வருத்தம் பூரணிக்கு
வில்லனாக்கி விட்டதில்
பாரதிராஜா மேல் கொலைவெறி
சிகப்பு ரோஜா பார்த்த கிரேசிக்கு
சான்சே இல்ல -இந்த வார்த்தை
அப்போது புழக்கத்தில் வந்திருந்தால்
ராஜபார்வைக்குப்பின் தேவி
இதைத்தான் சொல்லித் திரிந்திருப்பாள்
சரோஜினியின் கணவன் குள்ளமாக இருந்ததில்
பிரச்னை ஏதும் தெரியவில்லை
அப்புவுக்குப்பின்
குருவின் காலத்தில்
தொங்குமீசை விரும்பிய
சச்சு அக்கா புரிந்துகொண்டாள்
சுருண்ட மீசைக்காரன் பின்னால்
விமலா சுற்றியதை -
அது தேவர் மகன் விளைவு என்று....
கனவுகளைப் பங்கிட
யார் யாரோ வந்தபோதும்
"கமலாசனின் "ரசிகைகள்
இருந்துகொண்டே இருந்தார்கள்
படங்களை வெட்டி ஒட்டியபடி...
பாடல்களை முணுமுணுத்தபடி...
சண்டை போடும்,சங்கடப்படும் ,
சங்கடப்படுத்தும்
கமல் ஹாசன்களையும் ரசித்தபடி....

1 கருத்து:

ஞா கலையரசி சொன்னது…

கமலஹாசன் அக்காலப் பெண்களிடம் ஏற்படுத்திய பாதிப்புக்களை அவர் நடித்த படங்களின் வழியே அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்! கமல் மீதான ஈர்ப்பையும் பாதிப்பையும் என் கல்லூரித் தோழியிடம் நேரிடையாகப் பார்த்திருந்த என்னால் கவிதையை நன்றாய் ரசித்து அனுபவிக்க முடிந்தது. இக்கவிதையைக் கமலின் அறுபதாம் பிறந்த நாளின் போது வெளியிட்டமை சிறப்பு.பாராட்டுக்கள் உமா!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...