ஏப்ரல் பூ -3

திடீரென பார்வைக்கு வந்து சேரும் சிலுவை
தள்ளிவைத்த கனத்தையெல்லாம்
ஆணியிட்டு இறக்குகிறது
*************************************************************
வலியை மறப்பதா
மறைப்பதா துறப்பதா
தூக்கி எறிவதா
ருசிக்கப்பழகுவதா .
ஒவ்வொரு கேள்விக்கும்
தாளம் போடுவது போல்
ஆடிக்கொண்டிருக்கும்
நெகிழிப்பையை எடுத்தெறிய வேண்டும் முதலில்
*********************************************************
நிர்தாட்சண்யத்தை
சாதனை போல
சொல்லிக்கொள்ளும்
தருணத்துக்கான
அழிப்பான்
எங்கு விற்கப்படுகிறது
***********************************************************
அழுத்தமான நிறங்களை
மட்டுமே கடைவிரிப்பதால்
வானவில்லையே
ரசிப்பதில்லை
என்ற உன் பெருமிதத்தின்
பொருள்
மழுப்பல்களின் வழிபாடா
அந்தப்பெருமிதத்தில்
இடி விழ....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை

மூக்குத்திப் பெண்கள்