தித்திக்கும் திங்கள் சேமிக்கும் செவ்வாய்


இன்று அலமாரி குறைந்தவிலையில் 
கிடைப்பதாக வந்த படம் 
சபலம் தந்தது.
பூட்டு மாதிரி ஒன்றையும் 
சாவி மாதிரி ஒன்றையும் வைத்து 
நீண்ட நாட்களாக 
என்னை நானே ஏமாற்றிக்கொள்வதை
மாற்றிவிடலாம் 

முன்னறையின் இருக்கைகள் 
மாற்றப்பட்டால் 
மாலைப்பொழுதுகளின் நிறமே ,
மாறிவிடும் போலிருக்கே 

செம்பாதி விலைக் குறைப்பில் 
காலணிகளும் ,
பாவித்தறியா வாசனைத்திரவியக் குழலும் ..
அளவு...ஒவ்வாமை என எதுவும் 
தடையிராவிடில் ஆளே மாறிவிடலாம் 

மும்பை நட்சத்திரங்கள் 
இவ்வளவு குறைந்தவிலை ஆடைகள்தான் 
உடுத்துகிறார்களா
எனச்  சற்றே வாய் பிளந்துவிட்டேன் போல 
ஒழுகிய எச்சில் நினைவூட்டுகிறது இருப்பை 

கணினித்திரையின் 
சன்னல்கள் ஒவ்வொன்றாய் சார்த்தினேன் 

நாளை என் வீட்டுக்கு 
தளவாடங்களோ ,நகைகளோ 
என்ன கொண்டுவரப்போகிறீர்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை

மூக்குத்திப் பெண்கள்