வரமளிக்க காத்திருக்கும் தெய்வம்இருள் கவிந்த இதயத்தில்
ஒளி
பரவக்காத்திருக்கிறது
ஜன்னல் சதுரம்...
பால்கனியின் கொடித்துணி .....
எதையும்
தாண்டிவரத் தயாராக ,
உன் கண் திறக்கக்
காத்திருக்கிறது!
ஒருவேளை நேரடியாக
'வெளி '- யின்
தரிசனம் தேடி
வெளியே வந்தால்
நேர்க்கோட்டு மின்னலாக
ஊடறுத்துப் பாயவும்
தயார்...
எழப் பிரியப்படாத
பூனையின் பசியோடு
இதயத்தை
தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறாய்
எனத் தெரியாது காத்திருக்கும்
அது
நீ சோம்பல் முறிக்கையில்
தேநீர் அருந்தப் போய்விடலாம் . 

கருத்துகள்

கீதமஞ்சரி இவ்வாறு கூறியுள்ளார்…
கடவுள் வருகைக்காய் கண்மூடிக்கிடப்பவர்கள், தங்கள்முன் கடவுள் வந்துபோன சுவடும் அறிவதில்லை. காலமெல்லாம் சோம்பலானக் காத்திருப்புகளிலேயே கழியும் சோகம். மூடிக்கிடக்கும் மனத்தை விழிக்கவைக்கும் கவிதைக்குப் பாராட்டுகள் சக்தி.
சக்தி இவ்வாறு கூறியுள்ளார்…
ஒளி எங்கோ ஒளிந்து கொண்டுவிட்டதாய்க்
கூச்சல் வேறு கிளம்பும்....!நன்றி கீதா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்