தீவிர வாசகி என சொல்லிக்கொள்ள முடியாத என்னைப்பார்த்து ஒரு தொடர் சங்கிலியின் கண்ணியைத்தந்துவிட்டார் கீதமஞ்சரியின் கீதா.
சிலர் கவனம் ஈர்த்துவிட்டோம் என்பது மகிழ்ச்சிதான் என்றாலும் ,
கவனமாக சுடர் காக்க வேண்டிய பொறுப்பு திடீரென வந்து மனத்தைக்
குடைகிறது .!
நாமே வைத்துக் கொண்டுவிட்டால் எப்படி ....ஒன்றை ஐந்தாக்கி
அடையாளம் காட்டி வணங்க வேண்டிய பொறுப்பு வேறு..!
அம்மா வெளியில் போக ,வீட்டுப் பொறுப்பைப்பார்க்கும்
பதின்வயதுச் சிறுமி போல் உணர்ந்தேன் .கொஞ்சம் பெருமை...கொஞ்சம்
பதட்டம்...
பிடித்த பதிவர் சிலரை இந்த இருநூறு என்ற எல்லைக்கோடு
தவிர்க்கவைத்தது.அதே கோடுதான் பெருந்தலைகளை சேர்க்கும்
வாய்ப்பையும் தந்தது.
பிடித்த வலைப்பூக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் லீப்ச்ட்டர்
விருதினைப் பெற்ற மகிழ்வோடு வழங்கி மகிழ்கிறேன்!
பாரதி கிருஷ்ணகுமாரின் உண்மை புதிதன்று -
எலி சிங்கத்துக்கு மகுடம் சூட்ட முனைவதுபோல் இருக்கிறதா?...
இருக்கட்டுமே....வலைப்பூவின் உறுப்பினர் எண்ணிக்கையால்
எலிக்கு யோகம்..!
சுந்தர்ஜி -பரிவின் இசை
இவருக்கு இரண்டு அப்பம் தரவேண்டும்.கைகள் அள்ளிய நீர் ,பரிவின் இசை -இரண்டுமே என் மனங்கவர்ந்தவை.படித்துத் தெரிந்து கொள்ளவும் முடியும்.படித்து உணர்ந்து கொள்ளவும் முடியும்...
ஹ ர ணி -ஹரணிபக்கங்கள்
கையளவு கற்க ஆசை ,கடுகளவு கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்
என்று ஒரு வரியைப் போட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்!
இவர்கள் கற்றது கடுகென்றால்... நீ நீ நீ ? என அன்றாடம் மணி
அடிக்கிறது!
ப.தியாகு-வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை
என் பெயர் இது எனத் தோன்ற வைத்தது வலைப்பூவின் பெயரே...போதிமரம்
என்றொரு கவிதை நான் போகவேண்டிய தூரம் சொன்னது .
குமரி.எஸ்.நீலகண்டன்-நீலகண்டனின் எழுத்துக்கள்
என் துறை சார்ந்த முன்னோடி.எழுதுகிறார் என்பது தெரியுமே தவிர
எழுத்தினைப் பதிவுலகம் வந்தபிதான் அறிந்தேன்...
நிலாக்கவிதைகளின் ரசிகையானேன் ...
அம்மா ஒரு வெல்லக்கட்டி வைத்துப்போனாள்
எறும்பு குழந்தைகளுக்குப் பங்கிட்டது..
குழந்தைகள் சுவைப்பார்கள்....
அம்மாவும் கூட
காத்திருக்கிறது சிற்றெறும்பு.... ..
9 கருத்துகள்:
எறும்புக்கு வெல்லக்கட்டியின் மகத்துவம் சொல்லியா விளங்கவேண்டும். பகிர்ந்தவை அத்தனையும் பாகு. எறும்பு ஊர்ந்த வழி இனி நானும் ஊர்ந்து செல்வேன் பங்கிட்ட வெல்லக்கட்டிகளின் பெருமை அறிய. நன்றி சக்தி.
இன்னும் உங்களை வாசிக்கத் துவங்கவில்லை என்ற குற்ற உணர்ச்சியுடனும் நீங்கள் பகிர்ந்த விருதுக்குத் தலைவணங்கியும் நம்பிக்கையின் சுடரை அணையாது காக்க வேண்டுமே என்ற பயம் தூவியும் ஏற்கிறேன் சகோதரி உங்கள் அங்கீகாரத்தை-நன்றி என்ற அகலமில்லாத ஒற்றைச் சொல்லுடன்.
அன்புள்ள சக்தி அவர்களுக்கு...
வணக்கமுடன் உறரணி. விருது பெறும் ஒவ்வொரு முறையும பயம் எழும்புகிறது கடலலை போல மனத்தில். அடித்துக் கொண்டேயிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவேண்டுமே என்கிற ஆசை அடித்துக்கொள்கிறது. மேலும் மேலும் எழுதவேண்டும் என்கிற ஒரு உத்தியை மனத்திற்குள் இது விதைக்கிறது. உங்களின் விருது வழியாகத்தான் உங்கள் பதிவிற்கு வந்திருக்கிறேன். கீதா அவர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் மனமுவந்து வழங்கவேண்டும்.
மிகப் பணிவுடன் உங்களின் அன்பான விருதை நிறைந்துபெருகும் நிலவொளிபோல வழியும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். தாங்கள் பகிர்ந்தது வெல்லக்கட்டியல்ல. அது காலத்திற்கும் என்னைக் கரைக்காது இயங்கவைக்கும் அமிழ்தக்கட்டியாக உணர்கிறேன்.
நன்றிகள்.
விருதுபெற்றமைக்கும்
சரியான பதிவர்களைக் கண்டெடுத்து அதனைப் பகிர்ந்து
மகிழ்ந்தமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி கீதா .இன்னும் கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கிறது !
நன்றி என்ற சொல் அகலமில்லாமல் இருக்கலாம் !
ஆனால் ...... உங்களிடமிருந்து வரும்போது ஆழமிக்கது
உமா கொஞ்சம் அடக்கி வாசி...
..
நிலவொளியின் குளுமை நிறைந்து பெருகட்டும்
ஈர எழுத்துக்கள் இதயம் நிறைக்கட்டும்
ரமணிசார்!ஐவரில் ஒருவராக நீங்களும் இருந்திருக்க வேண்டியது...
ஜஸ்ட் மிஸ் !உங்க வலைப்பூ பக்கம் ஒரே மாநாட்டுக்கு வர்ற மாதிரி
மக்கள் கூட்டமால்ல இருக்கு!அந்த வகையறாவில வாய்ப்பு கெடச்சா .
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! நன்றி சகோதரி !
கருத்துரையிடுக