புதன், நவம்பர் 02, 2011

டார்வின் படிக்காத குருவி...


ஒருகாலத்தில்
களத்துமேடு இருந்த ஞாபகத்தில்....
ஒருகாலத்தில் 
கூட்டமாய் வந்த ஞாபகத்தில் ...
ஒருகாலத்தில் 
தானியம் கொத்திய ஞாபகத்தில் ...
புதிய நகரின் 
குப்பைமேட்டு 
டெட்ராபேக்குகளில்  
அலகால் தடவித்தேடும் 
குருவியைப் பார்த்து 
சிரித்தது 
சுவரொட்டி அசைபோடும் 
பசு. 

3 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

தோழர் வேணு சொல்லி, இந்தக் கவிதை படித்தேன். அருமையாக இருக்கிறது. நானும் அசை போட்டுக்கொண்டு இருக்கிறேன். தங்களின் மற்ற கவிதைகளையும் படித்துக்கொண்டு இருக்கிறேன். எனது வலைப்பக்கத்தின் திரட்டியில் உங்கள் வலைப்பக்கத்தையும் இணைத்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்!

periyavijayakumar சொன்னது…

தோழர் வேணு கோபால் செய்து வைத்த அறிமுகம். உமாவின் கவிதைகளை படித்து மகிழ்ந்தேன். நவீன நகரத்து வீதிகளில் குருவிகளும் பசுக்களும் மட்டுமா? அனைத்து ஜீவ ராசிகளுக்கும் ஏமாற்றம் தானே.
விஜயகுமார்.

உமா மோகன் சொன்னது…

nandri thozhargale...nanbargalidam pahirnthu magizhum thozhar venuvukku sirappu nandri

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...