வாடகை வீடு(நினைவுகள் சொந்தம்)
எப்படித்தான் இருந்தீங்களோ
பழைய வீடு ....
கரிசனமாய் நண்பர்!
அழுக்கு சுவர்
ஈரம் ஊறும் மூலைகள்
எத்தனை ஓவர் எத்தனை பந்து
கணக்கறிந்து
கொக்கியிலாது ஆடும்
ஜன்னல் கதவின் லயம்
மழையோடு மல்லு க்கட்டும்
கதவுக்கான நுட்பங்கள்
மாற்றி மாற்றி
மஞ்சள் வட்டம் பூசிய
சாமி அலமாரியில்
படிந்திருக்கும் வேண்டுதல்கள்
எந்த பாத்திரம்
எந்த நேரம்
எப்படி ஒலிக்கும்
எல்லாம் தெரிந்த சமையல் மேடை
(சமயத்தில் உணவு மேசை )
உள்ளக்கிடக்கைஎல்லாம்
சொல்லியபடியே
ஒட்டி உறவாடிய
அடுப்பு மேடை .....
அவிழ்க்காது விட்ட கொடிக்கம்பி
துவைத்த துணி அளவும்
போனதும் ஒட்டிய
நடுக்கதவின் பாரதி
வெள்ளையடிக்கா வருடங்களையும்
உப்பு ஊறிய கரிச்சுவர்
சுவைத்திருந்த உணவையும்
சொல்லும் சாட்சிஎன்றான்
புது வீடு ரசிக்கா
சின்ன மகன் ....
எப்படித்தான் இருந்தீங்களோ
நண்பரின் கூற்றுக்கு
சிரித்துவைத்தோம்.
2 கருத்துகள்:
வாடகை வீட்டுச் சொந்த அனுபவம் (நொந்த அனுபவம்?) ரசிக்கும் படியாக இருந்தது.
”மாற்றி மாற்றி
மஞ்சள் வட்டம் பூசிய
சாமி அலமாரியில்
படிந்திருக்கும் வேண்டுதல்கள்,”
'உள்ளக்கிடக்கைஎல்லாம்
சொல்லியபடியே
ஒட்டி உறவாடிய
அடுப்பு மேடை ...’..
இந்த வரிகள் வெளிப்படுத்தும் யதார்த்ததை மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.
varugaikkum pathivukkum nandri@
கருத்துரையிடுக