செவ்வாய், நவம்பர் 29, 2011


தேய் பிறை அச்சம்




.

 பிடித்தபாடல்  
அலைபேசி அழைப்பில்
பதிய வேண்டாம்

அழைப்பின் போதெலாம்
ஒலித்து ஒலித்து
நம்
பிடிப்பு கரையலாம் ....

சமயா சமயமின்றி
ஒலிக்கும் பாடலை
கோபமாய் எரிச்சலாய்
நிறுத்த நேரலாம்

முழுமையாய்க் கேளாமல் 
உடனே எடுக்க 
திரையில் ஒளிரும் பெயர் 
நிர்ப்பந்திக்கலாம் 

புதிய எண் பார்த்து
யோசிக்கும் மனதுக்கு 
பாடல் எட்டாமலே போகலாம்...

இடம் பொருள் கருதி 
நாமே மென்னி திருகி 
அமைதிப்படுத்தலாம் 

இந்தப்பாடல் 
எதற்கென்ற 
விளக்கவுரை கேட்டு 
யாரும் நிர்ப்பந்திக்கலாம் 

3 கருத்துகள்:

Megala Sezhian சொன்னது…

நடையினில் எளிமை
எழுத்தினில் வேகம்
வளரும் கவிஞர்களுக்கு
கவிதை சாரத்தின் எளிய
கற்றல் பாடம்!
தேய்பிறை அச்சம்,
உண்மையில்
நடைமுறை வெளிச்சம்!

-மேகலா செழியன்

ஞா கலையரசி சொன்னது…

விகடனில் இக்கவிதை வெளியானதற்கு ஸ்பெஷல் பாராட்டு. ஒரு கட்டத்தில் பிடித்த பாடல் பிடிக்காத பாடலாகிவிடக் கூடும்.
அழகிய நடையில் அருமையானதொரு கருத்து!

உமா மோகன் சொன்னது…

nandri megala.kalaiyarasi iruvarkkum....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...