குற்றவியல் பிரிவுமாட்டிவைத்த கொசுவத்தி
நகர்த்திய நாற்காலி
ஓட்ட நகர்த்திய தரைதுடைப்பான்
வேகநடை போட்ட வீட்டுச்செருப்பு
எதனாலும்
நிகழ்ந்திருக்கலாம்
அந்த மரணம் ...
வண்ணம் மினுங்கிய
குட்டி
பட்டாம்பூச்சியை
குறுகுறுபபின்றி
எடுத்தெறிந்தது ...
இந்த
ஒற்றைவிரல்தான்! 

கருத்துகள்

venu's pathivukal இவ்வாறு கூறியுள்ளார்…
கவிதைக்கு நுடபமான பார்வை வேண்டியதாகிறது..
அப்புறம் தேர்ச்சியான சொற்கள்,
அச்சொல்லைப் பிறிதோர் சொல் வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து புறப்பட்டு
வரும் சொற்கள்...
கற்பனையின் வீச்சு வாசகரின் கரம் பற்றுவதாய்...

எல்லா விதத்திலும் அருமையாக அமைகிறது உங்கள் எழுத்து..
கவிதைகளைப் படைத்துக் கொண்டிருங்கள் ஓய்வின்றி.

எஸ் வி வேணுகோபாலன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

அடையாளங்களின் சுமை

சிறகின் வேறுபெயர்