அபி உலகம்-2
அபி உலகம்-2
அபி இருப்பதில்லை
அபி நாயே
அபி சனியனே
அபி எருமை
என்றெல்லாம்
விளிக்கும் வீடுகளில்
அபி இருப்பதில்லை....!
**************************
அவள்
எப்போதும் யாவர்க்கும்
அபிக்குட்டி
அபிச்செல்லம்
அபி பாப்பா
அபிம்மா....
*****************************
அபியை ஆசீர்வதியுங்கள்
சுடும் தொடுகையோ
கொடும்பார்வையோ
அவள் உடல் மேவாமல்
குழந்தைமை திருடும்
அவலம் படராமல்
பத்திரமாய்
பருவம் கடக்க....
2 கருத்துகள்:
கவிதை அருமை! சேலை கட்டிய தேவதையும் அருமை!
பகிர்விற்கு நன்றி சகோதரி!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
nandriyum vanakkamum
கருத்துரையிடுக