வியாழன், டிசம்பர் 15, 2011

தேவையில்லா நிழல்

கால காலமாய்
கரிதின்று கரிதின்று
புளி உதிர்த்த
மரங்களில் இனி இலக்கமிட வேண்டாம்!
மரங்களே இலக்கு ......
தூங்குமூஞ்சி ,புங்கை
துளிர் கொஞ்சம்
பாடம் செய்க!
அளவோடு உள்ளே
அவரவர்க்கு 
குளிர் பரப்பி பறக்கும் 
வாகன வரிசையின் 
அகலத்தேவைக்காக
அகற்றவேண்டும் அனைத்தும்...
தாருக்குப் பதில்
தங்கம் ஓடும்
சாலையில்
நிழல் கருணை தேடும்
மனிதனின் நிழலும்
வாராது!

4 கருத்துகள்:

ராம்கோபால் சொன்னது…

அசத்தல். இதுதான் உங்களிடம் நான் மிகவும் எதிர்பார்ப்பது. இயற்கை சமநிலை பிறழ்வு குறித்தும் இதுபோன்ற கவிதைகள் கண்டன குரல்களாய் வரவேண்டும். எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளும் வரும் என எதிர்பார்த்து.........

உமா மோகன் சொன்னது…

nandri...kaaththiruppugalum nambikkaigalum arththmaagum naalai nokki...

ஞா கலையரசி சொன்னது…

நீண்ட நெடிய சாலைகளில் இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு வெறிச்சோடிப் போய் விட்டன. காரில் போகிறவர்களுக்கு நிழலுக்குப் பதில் செயற்கை குளிரூட்டி இருக்கிறது. ஆனால் இரு சக்கர வாகனங்களிலோ, சைக்கிளிலோ போவோரின் கதி?

நல்லதொரு கவிதைக்குப் பாராட்டு.

உமா மோகன் சொன்னது…

அகன்ற சாலைகளின் யுகத்தில் வாகனம் இல்லாதோர்க்கு என்ன இடம்?
நன்றி மேடம்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...