சனி, டிசம்பர் 10, 2011

வெளியே போ தயவு செய்து

அலமாரி
திறக்கும் அவசரத்தில்
கவனிக்கவேயில்லை
உள்ளிருந்ததா...
உள்நுழைந்ததா என....

முதலில்
சந்தேகமாய்த்தான் இருந்தது
புடவை சித்திரம்
புறப்பட்ட பிறழ் காட்சியோ...

உயர்ந்திருந்த கைஉரசி
நான் நிஜம் என
தா(தீ)ண்டியது
பொன்வண்ண பட்டாம்பூச்சி

பெருவெளியான பாவனையில்
அலமாரி கதவு திறப்பிலே
சுற்றிப் படபடக்கும்
உன்னை என்ன சொல்லி விரட்டுவது?
சூ..சூ...?
நாப்தலின் மணக்கும்
அடுக்குகளுக்குள்
மூட மனமிலாதஎன்  தவிப்பும்
பறக்கும் நேரமும் புரியாமல்
சுற்றும் பட்டூ.....

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோ!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

உமா மோகன் சொன்னது…

nandri

ஞா கலையரசி சொன்னது…

அதானே? அலமாரியிலிருக்கும் பட்டுப்புடவைக்குள் சமாதியாகிவிடத் துடிக்கும் பட்டாம்பூச்சியை என்ன சொல்லி விரட்டுவது?
எல்லோருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் நிகழும் ஒரு நிகழ்வு உங்கள் கைவண்ணத்தில் நல்ல கவிதையாகப் பரிணமித்துள்ளது.பாராட்டுக்கள் உமா மேடம்.

உமா மோகன் சொன்னது…

nandri kala madam

புகைப்படத்திலிருந்து ஒலிக்கும் குரல்

  ஒருதலைராகம் நாயகிபோல வி"கழுத்து வைத்த ரவிக்கையுடன் நால்வருமாக முழங்கையோரம் மறுகையைச் சார்த்திக்கொண்டு நின்ற படம் இன்று கிடைத்தது ஒற்ற...