செவ்வாய், டிசம்பர் 27, 2011

எங்கேந்த அதெல்லாம்...?

பேபியக்கா
தைத்துவிடும் தாழம்பூச்சடை
காயும்வரை 
பின்னல் பிரிக்காது 
ஓசிக்குஞ்சல உலா...
யார்வீட்டுப்பெண்
சடங்கானாலும்
வெளியில் வரும் 
கெம்புக்கல் திருகுப்பூ ...
குத்துககாலுக்குள்
மடக்கி இழுக்கும் 
ஈருளியில் எரிச்சலாகி 
பேன்குத்தும் தாலாட்டில் 
செருகும் கண்கள் ...
ஏழுவீட்டுக் கூரையும் 
கட்டெறும்பும்
சேர்த்தரைத்த மருதாணி...
************
எந்த வரியும்
 புரியாது விழிக்கிறாள்
இந்நாளின் எழிலரசி      

6 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

அருமை

உமா மோகன் சொன்னது…

நன்றி சசிகலா

ஞா கலையரசி சொன்னது…

நம் பிள்ளைகள் இழந்து விட்ட எத்தனையோ சந்தோஷங்களில் இவையும் அடக்கம். அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

கீதமஞ்சரி சொன்னது…

பள்ளிக்காலங்களில் தோழிகளை வாந்த... போந்த என்றழைத்தத் தருணங்களை முற்றிலும் மறந்திருந்த பொழுதில் படிக்க வாய்த்த இக்கவிதை, பழைய நிகழ்வுகளை நினைவுக்குஞ்சலத்தில் ஆடவிட்டதோடு, அட, ஆமாந்த என்று அனிச்சையாய் வெளிப்படுத்துகிறது ஒரு ஆமோதிப்பை. பிரமாதம். பாராட்டுகள்.

Admin சொன்னது…

அருமை..இக்காலத்து எழிலரசிகளுக்கு அதையெல்லாம் தாய்மார்களும் பாட்டிமார்களும் சொன்னால்தான் உண்டு.
ஆனாலும் எழிலரசிகளில் சிலர் செவி சாய்ப்பது கூட இல்லை.

உமா மோகன் சொன்னது…

நன்றி கீதா நன்றி கலையரசி நன்றி மதுமதி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...