சென்ற பண்டிகையின்
புதுப்பட்டு
வாங்கி
நான்கே முறை அணிந்த
பவழ மோதிரம்
வங்கிக்கணக்கு ....
திசையெங்கும்
முளைக்கும் கரத்திலொன்று
இருளுக்குள் அமிழ்ந்து
கனக்கும்
முதியவள்
முதுகு நிமிர்த்தி
ஈரம் துடைக்க
காத்திருக்கிறாள்
கனவு தொலைந்த கண்களோடு...
***********************
ஏதிலியாய்க்
கிடப்பவள்
ஈரப் பிரக்ஞை
உதிர வேண்டியது
முதல் வரம்.
இறப்பு....
இரண்டாவது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக