புதன், ஜனவரி 04, 2012

பாக்யலக்ஷ்மியின் தலைப்பொங்கல்


 
வெல்லம்
குக்கர் பொங்கலுக்கு
வெளியிலா-உள்ளேயா?
************
அறுக்காத வயலிலும்
நாலுகதிர் பிடுங்கி
நசுக்கிப்போட்டாவது
புத்தரிசி"பொங்கல் வைக்கும்
அம்மா
அங்காடி அரிசிக்கு
அச்சுவெல்லம்
கணக்கு அறிவாளா?
*********************
அடிநெல் தள்ள
ஏறி இறங்கினால்
தொட்டுக்கும்பிட்ட
பத்தாயத்தில்
எலிப்புழுக்கை
கிடக்கிறதாமே?
**********************
வரப்பு மூலையில்
தம்பியோடு
நட்ட வாதங்கன்றுகள்
ஒன்றாவது இருக்குமா
தூர்த்து வீடாக்கியவர் 
நிழல் பெற?
************************
வயலைவிற்று 
வாழ்வு பெற்று 
பானைபிடிக்கப் போன 
பாக்யலக்ஷ்மிக்குப் 
பல கேள்விகள் ..... 
  

6 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

பாக்யலக்ஷ்மி பழகிவிடுவாள், கேஸ் அடுப்புக்கும், குக்கர் பொங்கலுக்கும். குக்கர் விசிலடிக்கையில் தன்னை மறந்து சொல்லக்கூடும் பொங்கலோ பொங்கல். நடைமுறை யதார்த்தம் என்றாலும் தூர்க்கப்படும் வயல்களும், புழுக்கை காணப்படும் பத்தாயமும் மனதோரம் இனம் புரியா வேதனை உண்டாக்குவதை மறுப்பதற்கில்லை. பாராட்டுகள்.

உமா மோகன் சொன்னது…

வருடாவருடம் புதிய பாக்யலக்ஷ்மிகள் வயல் விற்று வாழ்வு பெறுகிறார்கள்.பழகிக்கொள்கிறார்கள்
நாம்?

உமா மோகன் சொன்னது…

நன்றி கீதா

சாகம்பரி சொன்னது…

பொங்கலின் சுவையும் கதையும் மாறி பஞ்சம் பிழைக்கப்போன நிதர்சனம் கவிதையில் தெரிகிறது. அரிசியே விளையாத எதிர்காளத்தில் மாத்திரை போட்டுக் கொண்டு பொங்கலோ பொங்கல் சொல்வோம். பகிர்விற்கு நன்றி.

உமா மோகன் சொன்னது…

சம்பிரதாயங்களைச் சளைக்காமல் பின்பற்றி
சஞ்சலமின்றி அவலங்களில் அழுந்திப்போகும் சமுதாயப்
பிரஜைகள் அல்லவா?
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சாகம்பரி
தொடர்ந்து வரவேற்கக் காத்திருக்கிறேன்

பெயரில்லா சொன்னது…

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...