புதன், மார்ச் 20, 2019

விதானம் இல்லாத தூண்கள்


அன்றொரு நிரம்பிய நிலவுநாள்
பூதகணங்களின் மனமெங்கும் 
கலாமோகம் தளும்பிக் கொண்டிருந்த பொழுது
ஆளுக்கு ஒன்றோ ஐந்து பத்தோ
அரக்கப்பரக்க என்றோ
அணு அணுவாக ரசித்து என்றோ
உருவான வித்தையை விதந்தோதவும் யாருமிலாது உருவாகிக்கொண்டிருந்தன தூண்கள்
தத்தமது பெயர் பொறிக்காது
பொதுவில் உருவாயின
சற்றே தாமதமாக கதிரெழும்பியிருக்கலாம்
தன் கணங்களின் கூட நின்று
அவனாவது ஒற்றை விதானம்
போர்த்தியிருக்கலாம்
இப்படித்தான் செய்துவிடுகிறான்
பித்தன்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...