புதன், மார்ச் 20, 2019

பத்தடிக்கு இந்தப்புறம் செண்பகம்



அழுதேன் அன்று என்றாள் ஒரு தோழி
ஒன்றும் பேசாமல் 
மேசைமேல் வேகமாக நடனமிட்டுக்கொண்டிருந்த
 நண்பனின் விரல்கள்
நானும் நானும் என்றன
கோணலான ஒரு புன்னகையைச் சிந்தியபடி 
நீ கேட்டுக்கொண்டிருந்தாய்
அதுவும் கண்ணீரின் மொழிபெயர்ப்புதானே

**********************************************************************
என் வாசலில் 
ஒரு செண்பகக் கன்று வைத்திருக்கிறேன்
அது எப்படி மலரும் என்ற நினைவுகளிலும் 
அத்துணை வாசம்
இளமஞ்சளான வெள்ளை,சந்தனம்,
நன்மஞ்சள் என 
எங்கெங்கோ நான் கண்ட 
செண்பக மலர்களின் நிறச்சாயலை 
ஒருசேர ஒவ்வொரு கிளையிலும் காண்கிறேன்
எவனோ மூக்கு சிந்தி எறிகிறான்
தெருவின் அகலம் பத்தடி
அந்தப்பக்கம் நிற்கும் காட்டாமணக்கும்
என் செண்பகமும் 
அவனுக்கு செடிதான்
மூக்கு சிந்துவதிலெல்லாம் மிடுக்கை நிரூபிக்கும் 
அவனோடும் 
நான் பகிரத்தான் வேண்டியிருக்கிறது
என் பத்தடி உரிமையை
     

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...