என்னதான் ஆகிவிடுகிறது இந்த நேரத்திற்கு
ருக்கு பெரியம்மா
கால் வெற்றிலையும்
காலே அரைக்கால் கொட்டைப் பாக்குமாக
அதக்கிக் கொள்வாளே
அந்த காலே அரைக்கால் கொட்டைப்பாக்களவு
கிடைத்தால் போதும்
அந்த கவனத்திலேயே ஆசுவாசமாகிவிடும்
************************************************************
சிணுங்கி சிணுங்கி
முக்கால் இட்டிலி சாப்பிட
முப்பது கதை கேட்ட பாப்புக்குட்டி
அத்தனை "தங்கமில்ல'" கொஞ்சலையும்
திருப்பிக்கொடுத்துக் கொண்டிருக்கிறாள்
விருந்தாளி குழந்தைக்கு
கொலுவில் நின்ற வாமனர் புருவம்
உயர்ந்தது அப்போதுதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக