செவ்வாய், டிசம்பர் 08, 2020

அதனதன் கிளை

 சிரித்துக்கொண்டேதான் சொன்னாய் அதுதான் புரியவில்லை

அவமானத்தின் நரம்பை இழுத்து விடும்போது கொஞ்சம் கை நடுக்கி விடுமல்லவா ***************************************************
சோடியாகத்தான் அடுத்தடுத்து
வேர் விட்டிருக்கிறது
ஆயினும்
எப்போதாவது பூக்கும் மனோரஞ்சிதத்திடம்
அனுமதி கோராமலே
பூத்து உதிர்கிறது
நித்திய கல்யாணி
அதனதன் கிளை
அதனதன் வாழ்வு
****************************************************
ஒரு முறை பார்த்துத் திருத்திக் கொண்டிருக்கலாம்
சற்றே வழிந்திறங்கும் கண் மையை
சொல்லத் தோன்றியதைச் சொல்லாமல் விட்டேன்
அவள் நாளைத்
திருத்துவதென்று தொடங்கினால் தீரவே தீராத வரிசையில் இதையும் வைத்தாயிற்று ********************************************

கருத்துகள் இல்லை:

ஆசுவாசம்

  என்னதான் ஆகிவிடுகிறது இந்த நேரத்திற்கு ருக்கு பெரியம்மா கால் வெற்றிலையும் காலே அரைக்கால் கொட்டைப் பாக்குமாக அதக்கிக் கொள்வாளே அந்த கா...