திங்கள், ஜனவரி 16, 2012

நிரம்பா அரங்கம்





ஓரிருவர் ...
தொடர்பிலா திக்குகளில்.... 
அலைபேசி நோக்கியவாறு 
சில தலைகள் 
அருகே எவருமிலா 
மூலைஇருக்கையை 
கவனிக்க வசதிஎனத் 
தேர்ந்திருக்கலாம் .
தாமதமாக
சபை நிரம்பலாம்...
**************************************
எந்த சமாதானமும் 
தராத நிம்மதியை 
காலி இருக்கைகளுக்கும் 
காதுகள் இருக்கலாம் 
என்ற கற்பனை தந்தது...
இருக்கைதோறும்
கைப்பிடிபோல் 
ஈரிரு காதுகள் முளைத்தன ...... 
காத்திருக்கும் செவிகள் 
மீதான காதல்  
தூறலாய்த் தொடங்கி 
பெருமழையென நனைத்தது 
ஆளில்லா இருக்கைகளையும் .......
 

3 கருத்துகள்:

ramgopal சொன்னது…

"காத்திருக்கும் செவிகள்
மீதான காதல்
தூறலாய் தொடங்கி
பெருமழையென நனைத்தது
ஆளில்லா இருக்கைகளையும்
- ஆஹா, வாளிப்பான கற்பனை. சுகம் தான் இல்லாத பேரை இருப்பதாக நினைப்பது. ஒரு வேளை ஒரு பத்து பேர்களை வைத்து கூட்டங்களை நடத்துபவர்களுக்கு இதுதான் தைரியத்தினை, நம்பிக்கையை கொடுப்பதோ?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல கற்பனை சகோதரி! வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் :"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

உமா மோகன் சொன்னது…

கற்பனை உயிர்ப்பிக்கும் அமுது....நன்றி நண்பர்களே

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...