புதன், ஜனவரி 11, 2012

இறந்த காலத்தின் தெய்வம்

மைதீர்ந்த
எழுதுகோல்கள்
சிரிக்கின்றன...
கேள்வி கேட்கின்றன..
சவால் விடுகின்றன..
எழுதி முடிக்கவியலா
நெடுநெடுநெடு
வரிகளை
அடையாளம் தெரியுமா
கெக்கலிக்கின்றன ....
மணல் மூடிய நதியாக
ஈரமிலா முனைகள்
கேள்வி கேட்பது விசித்திரம்தான் !
ஆனாலும் ,
அவை
கனவிலும்
வாத்தியக் குழுவோடு
வந்திறங்கிப் பாடுகின்றன ...
அதே  கேள்விகளை!

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...