ஒளியில் தொடங்குகிறது நாள்.. ஒளியில் தொடங்குகிறது உற்சாகம்
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில்நம்மை இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின் சக்தியை கண்டபோது ..
தொடங்கியது மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை
பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில்நம்மை இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின் சக்தியை கண்டபோது ..
தொடங்கியது மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை
பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!
5 கருத்துகள்:
அருமையான கவிதை
இருளில் இருந்தால் தான் ஒளியின் அவசியம் புரியும்
சபாஷ், பொங்கல் தலைப்பு கவிதை. வாழ்த்துக்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நன்றி நண்பர் ஹைதர் அலி
நன்றி நண்பர் கோபி
இந்த கவிதை தினமணி இணையத்தில் பொங்கல் மலரில் வெளியாகியுள்ளது
கருத்துரையிடுக