திங்கள், ஜனவரி 16, 2012

ஆற்றின் மேல் ஒரு சமாதி (பழைய பாலம்)

இப்படித்தான் 
என்னோடும் 
உறவாடிக் கொண்டிருந்தார்கள் 
கைப்பிடியோரம் 
சைக்கிள் சாய்த்து வைத்து 
கதையளக்கும் நிரந்தரக் கூட்டம் 
சரசரவென 
விரையும்  வாகனவரிசை 
சமயங்களில் 
வழிவிடாச் சண்டை 
மோதி மோதிக் 
கடந்து போகும் காற்று .....
*************************************
எல்லாம்
 ஒரு சந்தேகத்தில் 
முடிந்து விட்டது !
வலுவில்லை எனக்கென 
வந்தது புதிய பாலம் !
காற்றும் குப்பையும் 
மட்டும் 
கடந்துபோகக்  கிடக்கிறேன்  
பக்கத்து பரபரப்பின் 
பார்வையாளனாக ......

2 கருத்துகள்:

ramgopal சொன்னது…

பாவம் பாலம் என்னதான் செய்யும் புலம்புவதை தவிர..... திருச்சியில் காவிரி பாலமும், ஈரோட்டில் பவானி பாலமும்தான் எனக்கு ஞாபகம் வருபவை. இன்னும் நிறையவும் இருக்ககூடும். நரைத்த பொழுதில் அவை சந்ததியினருக்கு காட்சி பொருளாகவும் கூடும்.

உமா மோகன் சொன்னது…

கைவிடப்படுவதைவிட அழிக்கப்படுதல் சிலவற்றில் நல்லது

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...