பின்பனிக்கான முண்டாசுடன்
வேப்பங்குச்சி சகிதம்
தென்னந்தோப்புக்குச் சென்றுவிடும்
மாமாவுக்கு
மக்கள் நால்வரில் எவரேனும்
உண்டி கொடுத்து பள்ளி செல்வதுண்டு
பாளை கிழிக்கவும்
மட்டை தரித்து வாரியல் கட்டவும்
மக்களை அனுமதியாள் மாமி
என்னோடு போகட்டும்
இந்தக்குப்பை என்று.
அவளோடுதான் போனது தோப்பு
புற்று கரைக்கக் கட்டிய
மருத்துவமனைக் கட்டணமாக
மாமாதான் முண்டாசோடு கிளம்பி
பின்
தயங்கி உட்காருகிறார் ஒவ்வொரு காலையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக