சின்ன அணில் பெரிய அணில்
எது எதைத் துரத்துகிறது தெரியவில்லை.
சமயத்தில்
சின்னது முன்னே
அப்படியே ஒரு அரைவட்டத்திருப்பலில்
மாறிவிடுகிறது
அன்பா
பந்தயமா
அடிதடியா
ஒன்றும் புரியவில்லை
சட்டென்று ஓட்டக்கோடுகளை
விட்டுப் படியிறங்கி
என் பாதம் நெருங்கிவிட்டது ஒன்று
பதட்டத்தில் நகர்ந்துகொண்ட பின்தான்
தோன்றியது
சின்னதா,பெரிதா
எது மிரட்டியதெனப் புரியாதது
************************************************
வாசல் திறந்துவிடுவதென்பது
ஒரு சம்பிரதாயம்
அடைப்பதென்பதும்
விழுந்த சருகு
காற்றிலடித்துக்கூட
உள்நுழையா நாளுண்டு
வந்தவரெல்லாம்
வெளியேறியும்
கிராதிக்கதவின் டங்
வீடு முழுக்க உட்கார்ந்து விடும் நாளும் உண்டு
*******************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக