அரூப ஈரம்

ஊருக்குப்போனவனுக்கு ஒரு சொல்
எனக்கும் வருத்தம்தான் 
ஆறு சுடுவது
ஆனால் 
அந்த நதி தீரம்
தண்ணீரால் மட்டும் 
ஈரமடைந்திருக்கவில்லை
மதகில் அமர்ந்து 

கதைபேசியிருந்த தோழமையில்
அவர் கண்களில் குடியிருந்த கனவில்
குறைகொண்டவனிடம் காட்டிய பரிவில் 

சேர்த்திருந்த
அரூப ஈரம் அது
இன்று மணல் சுட்டாலும்
புலன்வழி குளிர்மை 

உணர்ந்திருப்பாய் நட்பே


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

பூ தைத்த சடை

ராஜலட்சுமியைப் பார்த்தவள்