புதன், ஆகஸ்ட் 19, 2020

கொரோனா கவிதைகள்

 முழங்கையால் கதவைத்தள்ளி

முழங்கையால் குழாய்திருகி


தன்கையிலிருந்த 

கிருமிநாசினித் திரவத்தைப்பொழிந்து 

குழாயையும் அலசி
ஒருவழியாகக் கை கழுவிக்கொண்டவள் 

சிரித்தாள்
சாதாரணமா சாப்பிட உக்காருவதே மறந்து போச்சு


அப்பப்போ 

தோள்பட்டையால கூடத் தள்ளலாம் 

கதவுகளை

புதிய நுட்பமொன்றைச் 

சொல்லிக்கொடுத்த திருப்தியில் 

நானும் கிரமத்தை முடித்தேன்


வீட்டுக்குப் போகிறாளாம் இன்று

நாங்கள் சந்தித்துக் கொண்டது 

கொரோனா வார்டில்தான்

1 கருத்து:

G.M Balasubramaniam சொன்னது…

இந்த கொரோனாவை என்ன செய்ய ஒரேயடியாய் 12 பதிவுகள் சந்தேகப்பட வைக்கிறது நலம் தானே

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...