ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

ட்வீய்க் கிழமை

 இன்னும் இரவென்றே எண்ணி

கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது
காற்று
பகலவனின் நிறக்கதவு
திறக்கா காலையில்

*******************************************
தானியக்கதிர் வளைந்தாடும்
திரைச்சீலையைக்
கொத்திக் கொண்டிருக்கிறது
குருவி

*********************************
உனக்குக் காலமில்லை
மழைத்துளி
சில நிமிட உறவுதானே

******************************************
டப்
டப்
சட்சட்
சடசட்
போ
இதற்குமேல் மொழிபெயர்ப்பதற்கில்லை

*******************************************
இரட்டை அணில்களின்
ட்வீய்க் ட்வீய்க்கோடுதான் இந்தநாள் தொடங்கியது
உங்களுக்கெல்லாம்
இது திங்கட்கிழமை
எனக்கு
ட்வீய்க் கிழமை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...