மரவட்டையை விட ....

நிறைந்த கண்களோடு
நீ பார்த்துக்கொண்டிருந்தாய்
ஆனாலும் கொஞ்சம் ஒளி இருந்தது
எவரோ வந்து தீர்க்கக்கூடியதா
எங்கோ சென்று தீரக்கூடியதா
எதையோ நினைத்து மாறக்கூடியதா
எதையோ பேசி மறையக்கூடியதா
கணந்தோறும் கணந்தோறும்
வளரும் ஒன்றை
கரைத்திடத் தகுமோ சிலதுளி
துளிகள் பெருகி வழியும் பொழுதுகளிலும் நீ
ஒளியைக் கைவிடாதிருப்பாயாக
மரவட்டை திசை திரும்பி
திசை திரும்பி
பூமி தனக்குமானதென ஊர்கிறது


ஆனால்
மரவட்டையை விட
நீ சந்திக்க வேண்டியவை அதிகம் 
என்பதை ஏற்கத்தான் வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூக்குத்திப் பெண்கள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை