காலியாகிவிட்டது

எல்லாவற்றுக்கும் ஒருகாரணமும்
எல்லாவற்றுக்கும் ஒரு மறுதலிப்பும்
எல்லாவற்றுக்கும் ஒரு முகந்திருப்பலும்
எல்லாவற்றுக்கும் ஒரு கண்டனமும் வைத்திருக்கிறீர்கள்
அந்த அம்பறாத்தூணியில்
வேறென்னவெல்லாம் இருக்கிறது
இந்த கனிவு,கருணை,கத்தரிக்காய்
மருந்துக்கும் இல்லையா
ஓரத்தில் எங்காவது ஒண்டிக்கிடக்கிறதா
தேடிப்பாருங்களேன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை

மூக்குத்திப் பெண்கள்