நாளையும் பூக்கும்

அல்லித்தண்டுகளின் இடையிடையே
பாசியும் நிழலுமாக கலங்கித்தெளிகிறது
குளம்
நாளையும் பூக்கும்

*****************************************
எத்தனை மருகினாலும்
அதே சூரியன்அதே சந்திரன்
அதே குற்றங்கள்


*****************************************
நீலத்தைத்துளி துளியாய் எடுத்து கோர்த்தாயிற்று.
ஆயிற்றா
நட்சத்திரத்தை ஒவ்வொன்றாய்
தைத்தாயிற்று
ஆயிற்றா
நிலவைச் சுருக்கம் நீக்கி
ஒட்டியாயிற்று
ஆயிற்றா
சரி உங்கள் வேலை முடிந்தது
போங்கள்
வெயில் வழிந்துகொண்டிருக்கிறது

*****************************************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை

மூக்குத்திப் பெண்கள்