சிறகின் வேறுபெயர்

நீள் பயணம் என்றுமட்டும் தெரிந்தது
காற்றில் படடக்கும் துப்பட்டாவின் 
கடும் மஞ்சள் நிறத்தை ஊடுருவி 
வெயில் இறங்க 
பூமி தொடவியலாது
உதிர்ந்த மரமல்லி கடும் மஞ்சளில்
விரவ
பொன்னொளி முகம் தடவ
சுருங்கிய நெற்றியும்
இடுங்கிய பார்வையுமாக
இறகுகளைத் தேடியபோது
ஏதோ தட்டுப்பட்டது
அதன் பெயர் கால்விலங்கென்றான் வழிப்போக்கன்கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை

மூக்குத்திப் பெண்கள்