சமூகத்தின் தற்கொலை

சொற்கள் பேசமுடியாத போது 
மௌனம் நிறையப் பேசுகிறது
அந்த இரைச்சலைப் புறக்கணிக்கும் சமூகம் 
எதையும் கொலை செய்யும்
அது தன் தற்கொலை என்பதையும் உணராது
*****************************************************************
நீங்கள் என்ன சொல்வீர்கள் 
எப்படி வருந்துவீர்கள்
எவ்வாறு உணர்வீர்கள்
எதில் அவமானமடைவீர்கள்
எங்கு உங்கள் கண்ணீர்த்துளி
வீழும்
கையூன்றியாவது எழ இயலுமா
இப்படியெல்லாம் கரிசனம் கசியுமென்றா நினைத்தீர்கள்
மின்சாரம் பாய்ந்துமா....

******************************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுடல்,பெண்ணுறுப்பு,பெண்ணுயிர்

கட்டைவிரல் கீழ் யானை

மூக்குத்திப் பெண்கள்