ஒரு கனவுக்கு
எதையோ கிளறிவிடும் சாகசம் தெரிகிறது
கள்ளப்புன்னகையோடு
ஒளிந்துகொண்டுவிடவும் தெரிகிறது
எதையோ வதக்கியபடி
கிளறியபடி
உளறியபடி
தேடுவதும்....
*********************************************
மடக்கவும் உயர்த்தவும் முடியாத
இறக்கைகளோடு இருப்பது
பறவை வாழ்வல்ல
அறிவேன்
நிறுத்துவதும் குறைப்பதும்
தொடக்குவதும் உன் மனம்போல
*********************************************
பூஜ்ஜியம் என கண்ணுக்கெதிரில்
நின்று அறையும்வரை
ஏதோ இருப்பதான இருப்பில் எவ்வளவோ கணக்குகள்
பக்கத்தில் இருந்தாலும் போதும்
கடன்வாங்கி கழித்துவிடலாம்
என்ற நம்பிக்கையில்
விழுகிறது பார்
ஒரு துளி சிரி
**************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக