சற்றே வெளுத்து
கொஞ்சம் பொருக்கு உதிரத்தொடங்கியிருந்த சுவரில் சாய்ந்து கொண்டாள்
அலைந்து இழுத்த தலைமுடியைக்
கொத்தாய்த்தூக்கிச் செருகிக்கொண்டபிறகு
ஒரு இடைஞ்சலும் கிடையாதென்றுதான்
தோன்றியது
நீட்டிய காலை
ஆசுவாசமாய் மடக்கி நீட்டிக்கொண்டாள்
கல் பொறுக்க எடுத்துவந்த அரிசியிலிருந்து
ஒருபிடி அள்ளிப்போட்டு
மெல்லலானாள்
ஏட்டீ கல்யாணத்துல மழை வந்துரும்டீ
எப்போதும் கூவும்
ஆத்தா பார்த்தால்
இனி என்ன சொல்வாள்
மழை வந்துதான்
கலியாணத்தைக் கெடுக்கணுமாக்கும்
**************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக