அழுந்தத் தாழ் போடக்கூடிய ஒரு கதவு வாய்க்குமுன்னும் கூட இரவு பகல் வந்து போனதே இந்த வீட்டுக்கு
ஏற்ற இறக்கமான இரண்டு கதவையும்
தாழிடத் தோதாக
இழுக்கும் முயற்சியில்
இதோ இந்த வலது சுண்டுவிரல் நுனி
கன்றிப்போகாத நாளேயில்லை
அட ஆமாம்
இந்த நகமே முதல் நகமில்லை
நசுங்கி விழுந்து முளைத்தது
இத்தனை எளிதாகப் பூட்டிவிட வாய்த்த வாழ்வே
உன் கருணையே கருணை
******************************************
அடிப்பிடித்து கரிந்துபோன,
உப்பு ஏறியோ,மறந்தோ போன
திடமோ,நிறமோ குறைந்த
எதுவொன்றையும்
நீ
மறப்பதேயில்லை
உன்
நினைவின் தராசுக்கு
சப்புக்கொட்டிய தினங்களைக்
கொட்டிக் கவிழ்த்துவிடும் மாய ஆற்றல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக