திங்கள், டிசம்பர் 06, 2021

ஜோக்கர் கைத்துப்பாக்கி

 மரணத்துக்கு எண்ணிக்கை தெரியும் என்பது நம் நம்பிக்கை

சாவுற வயசா
என்று சொல்லத்தொடங்கியது அதனால்தான்
சமயத்தில் மரணம்
தூங்கிவிழுந்து கணக்கை மறந்துவிடுகிறது
சாவின் விசை
தாறுமாறாய்
அழுத்தப்பட்டிருக்கும்
காலத்தில்
அவனை விடாதே
அவனை விடாதே
என்று துணைப் பாத்திரங்கள் கூவுகின்றன
யாராவது துப்பாக்கியைப் பிடிக்க மாட்டார்களா என்று ஜோக்கர்கள்
சுற்றுமுற்றும் பார்த்து விழிக்கிறார்கள்
ஹீரோ இல்லாத படங்கள் இப்படித்தான்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...