புதன், ஜனவரி 11, 2012
அபி உலகம் 3
விடுமுறை நாளின்
சித்திரங்கள்
திறந்தன...
இன்றைய வானவில்லில்
நீல நிறத்தையே காணோம்!
வானம் வரைந்தே
தீர்ந்து விட்டதென்றாள் அபி!
**************************
அபிக்கு
யானை,சிங்கம்,
புலி, காண்டாமிருகம் ,
உயரம் குறைவான
ஒட்டைச்சிவிங்கி
எல்லாம் வேண்டுமாம்
கரடியைப்போலவே
உட்கார்ந்து விளையாட....
********************************
நெய்ச்சோறு ,
நூடுல்ஸ் ,பழத்துண்டுகள்,
ஐஸ்க்ரீம் ....
கொஞ்சிக்கொஞ்சி
அபியால் ஊட்டப்படும்
பொம்மைப் பரிவாரங்களைப்
பார்த்தால்
அம்மாவுக்குப் பயம்தான்
அவை
கேட்டுவிடுமோ என்று...
சித்திரங்கள்
திறந்தன...
இன்றைய வானவில்லில்
நீல நிறத்தையே காணோம்!
வானம் வரைந்தே
தீர்ந்து விட்டதென்றாள் அபி!
**************************
அபிக்கு
யானை,சிங்கம்,
புலி, காண்டாமிருகம் ,
உயரம் குறைவான
ஒட்டைச்சிவிங்கி
எல்லாம் வேண்டுமாம்
கரடியைப்போலவே
உட்கார்ந்து விளையாட....
********************************
நெய்ச்சோறு ,
நூடுல்ஸ் ,பழத்துண்டுகள்,
ஐஸ்க்ரீம் ....
கொஞ்சிக்கொஞ்சி
அபியால் ஊட்டப்படும்
பொம்மைப் பரிவாரங்களைப்
பார்த்தால்
அம்மாவுக்குப் பயம்தான்
அவை
கேட்டுவிடுமோ என்று...
சனி, ஜனவரி 07, 2012
இழந்த வரங்கள்
காதலை கண்ணீரை
காத்திருப்பை
கூறுகளோடு பேரத்தை
ஆயாச இளைப்பாறலை
போதை உளறல்களை
பெருங்கூச்சல் வம்புகளை
பறக்கும் பந்துகளை
பெத்தாங் குண்டுகளை
பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம்,,,,,
அனிச்சையாய்க் கிள்ளியபோதும்
ஆள்வைத்துத் தள்ளியபோதும்
எட்டும் தொலைவெலாம்
நின்றிருந்த
நெட்டை,குட்டை
நீள் உறவைப் பறிகொடுத்தோம்
சருகுகள் நொறுங்க
இல்லாத மின்சாரம்
இழப்பீடு...
எல்லாக் கதையோடும்
நடக்கிறோம் சுடச்சுட....
பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம்
காத்திருப்பை
கூறுகளோடு பேரத்தை
ஆயாச இளைப்பாறலை
போதை உளறல்களை
பெருங்கூச்சல் வம்புகளை
பறக்கும் பந்துகளை
பெத்தாங் குண்டுகளை
பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம்,,,,,
அனிச்சையாய்க் கிள்ளியபோதும்
ஆள்வைத்துத் தள்ளியபோதும்
எட்டும் தொலைவெலாம்
நின்றிருந்த
நெட்டை,குட்டை
நீள் உறவைப் பறிகொடுத்தோம்
சருகுகள் நொறுங்க
இல்லாத மின்சாரம்
இழப்பீடு...
எல்லாக் கதையோடும்
நடக்கிறோம் சுடச்சுட....
பக்கத்திருந்து
பார்த்திருக்க சாட்சியிலா
வெட்டவெளி மனிதர்களானோம்
புதன், ஜனவரி 04, 2012
பாக்யலக்ஷ்மியின் தலைப்பொங்கல்
வெல்லம்
குக்கர் பொங்கலுக்கு
வெளியிலா-உள்ளேயா?
************
அறுக்காத வயலிலும்
நாலுகதிர் பிடுங்கி
நசுக்கிப்போட்டாவது
புத்தரிசி"பொங்கல் வைக்கும்
அம்மா
அங்காடி அரிசிக்கு
அச்சுவெல்லம்
கணக்கு அறிவாளா?
*********************
அடிநெல் தள்ள
ஏறி இறங்கினால்
தொட்டுக்கும்பிட்ட
பத்தாயத்தில்
எலிப்புழுக்கை
கிடக்கிறதாமே?
**********************
வரப்பு மூலையில்
தம்பியோடு
நட்ட வாதங்கன்றுகள்
ஒன்றாவது இருக்குமா
தூர்த்து வீடாக்கியவர்
நிழல் பெற?
************************
வயலைவிற்று
வாழ்வு பெற்று
பானைபிடிக்கப் போன
பாக்யலக்ஷ்மிக்குப்
பல கேள்விகள் .....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மயில் நீலச்சேலை. டிசைனர் ரவிக்கை, பொருத்தமாய்த்தேடிவாங்கிய அணிகலன்கள் , செருகிய பூச்சரமும் ஒப்பனைப்பூச்சுகளும் ... பொருத்தம...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...





