வெள்ளி, செப்டம்பர் 27, 2019

சுழலும் பதட்டம்

வீசியெறியப்பட்ட சுத்தியல்
காற்றில் சுழன்று சுழன்று சுழன்று.....
கைகளைத்தோள்மேல் பிணைத்த இளைஞர்கள்
உரக்க உரக்கத்தலைசாய்த்து
சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்
நந்தவனம் அன்பே நீதான்
உனை நான் செல்லும் பாதையில் கண்டுகொண்டேன்" 
தானும்
ஒலியோடே இழைந்துகொண்டிருக்கிறாள்
துணி உலர்த்தும் ஒருத்தி
சீருடைகளின் முனை கசங்கலை நீவிவிட்டபடி
சைக்கிள் காரியரின் புத்தகப்பைகளை 
இறக்க எத்தனிக்கின்றது
சிறுமியர் கூட்டம்
எந்தப்பரப்பிற்கு நேராக
சுழல்விசை நிற்கப்போகிறதென்று
சுத்தியலுக்கும்
பதட்டம்தான்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...