வெள்ளி, செப்டம்பர் 27, 2019

அறியாக் கலை


இறங்கிச்சாய்ந்த கிளை
ஒருக்களித்து நின்று 
கதையடிக்கத் தோதான
மைதானவேம்புக்கும் 
எங்கள் குழுவில் இடமிருந்தது
உதிர்ந்த குரும்பைகளைக் 
கல்லாங்காய் கணக்காய் தூக்கிப்போட்டு
 பிடித்தபடி
பேசும் கதைகளை
கொல்லைத்தென்னை நான்குமறியும்
வேலிப்பூவரசு விரித்த நிழலிடை 
வெயிலில் காயும் 
உடைத்த புளி,வடகமெலாம்.
சாலைப்புளி நிழலில்
சைக்கிள் கிடக்க
வாய்க்கால் குளியலுக்கு
வந்திறங்கும் வாண்டுக்கூட்டம்
ஒவ்வொரு மரமும் காட்டி
ஒவ்வொரு கதை சொன்னேன் மகளே
ஒத்தபடி குரோட்டன் இலைநறுக்கிய 
குட்டிப்பலகணியின் குடைநிழலில் நின்றபடி
ஒவ்வொரு மரவாசம்
உணர்த்தத்தான் அறியவில்லை 


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...