வெள்ளி, செப்டம்பர் 27, 2019

உங்கள் உரிமை உங்கள் பரப்பு

அன்பைக்குளிரக்குளிரப்
பெய்வது 
உங்கள் வாழ்நாள் இலக்காக இருக்கலாம்
நன்கு செருமிச்சிந்தி எறியும் 
சளிக்கொத்தாக
அருவருத்துக் கைஅலசும்
மனிதரிடமும் அதே
ஈரமா
ப்ச்

**************************************
உங்கள் கோடு
உங்கள் உரிமை
நெடுக்காக
குறுக்காக
கிடையாக
வளைவாக எப்படிப்போடுவதும் 

உங்கள் உரிமையேதான்
உங்கள் பரப்பில் மட்டும்

***************************************************
பேசுகிறேன் என்று சொன்னீர்களே
குற்றவுணர்ச்சியைச் சிலர் தூவுகிறார்கள்
சிலரோ துளி மிச்சமின்றி
வழித்துத் தலையில் கவிழ்த்துவிட்டுப் 

போகிறார்கள்
அப்போதைக்கு வழியும் துளி 

கண்ணில் படும் அரப்புத்தூள் 
போலத்தான் இருக்கிறது
ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை
பிறகு அழைக்கிறேன்
பேசுகிறேன் என்பதை
பேசக்கூடாது என்றில்லை
யார்யாரிடம் சொல்லியிருக்கிறோம் என்பதுதான்.....




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...