வெள்ளி, செப்டம்பர் 27, 2019

சொல் மாற்றும் விளையாட்டு

அதிகம் அலட்டாத உடல்மொழியோடு 
நறுக்குவதற்கு எங்கு கற்றாயோ
தலையையே அரிந்துவைத்தாலும்
அதன் அழகு
வைத்த நேர்த்தி
ரத்தம் சொட்டா பாங்கு பற்றி
உன் விளக்கம் கேட்கக்

 காத்திருக்கிறது உலகம்
அரியப்பட்ட தலையும் 

வரிசைக்கு வரத்துடிக்கும் 
****************************************************************
தவறான தகவலைச்
சொல்பவர்கள்
தவறான பா'வம் காட்டுபவர்கள்
நிதானமாக இருக்கிறார்கள்
வந்தடைந்த
இடம் சரியில்லை
உனக்கும் எனக்கும்
ஒரே படபடப்பு
************************************************
நினைவிருக்கிறதா
காலையை மாலை
பகலை இரவு
நிலவை சூரியன்
என்று மாற்றிச்சொல்லும் விளையாட்டு
அதுதானா இது
சுபிட்சம்
சொர்க்கம்
வளம்
என்ற முழக்கங்கள்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...