வெள்ளி, செப்டம்பர் 27, 2019

சற்றேற அதே உப்பு

என்னுடையது
என்னுடையது
என்று எதையெடுத்தாலும்
அதில் கொஞ்சம் தொட்டு ஒட்டிக்கொள்ளவும்
என்னைக்கிள்ளிக் 
கொஞ்சம் ஒட்டிவிடவுமே பழகிவிட்டது
உங்கள் சந்தோஷம் சொல்லும்போது
அந்தக்குமிழ் சிரிப்பின் சாயலில் 
இருந்த தருணத்தையும்
உங்கள் அழுகையின்போது
சற்றேற அதே உப்பு
கரித்த துளியையும்
மீளக்கொண்டுவந்து
பூரணமாவேன்
என்னுடையது அல்லாத உலகத்தை 
ஒரு கண்ணாடிக்கோப்பையாக
மேசைமேல் வைத்து பெருமிதப்படுவீரோ
இருங்கள்
கிளிங்
ஒரு துண்டு மற்றும் என் கீறல்
குருதியும் உப்பு கரிக்கிறது
ஆக இப்போது
அதன் பங்காளியானேன்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...