வெள்ளி, செப்டம்பர் 27, 2019

ட்ருக்கி ட்ருக்கி

அடர்பச்சை திரைச்சீலையாக 
அசைந்துகொண்டிருந்த ஏரி
குட்டைச்சேறாக அயர்ந்து கிடக்கிறது
படகுகள் மோதாத
குழந்தைகளின்
 பறவைகளின் குதூகல இரைச்சலில்லாத 
அலுப்பான நாட்கள்
வெள்ளம் மழை செய்திகளை
வலைத்தடுப்புக்குள் அமர்ந்து 

வாசித்துக் கொண்டிருக்கிறான்
அனுமதிச்சீட்டு கிழிக்கும் 

வேலையற்ற பணியாளன்
யாரோ இழுப்பதான நினைவில் 

தானே புரண்டுகொண்டது துடுப்பு
*************************************************************
ட்ருக்கி ட்ருக்கி ட்ருக்கி
ட்ருக்கீ
கடைசி நீட்சி கேட்டலின்
இயல்பில் அகச்செவி
நீட்டியதாயிருக்கலாம்
காலையென்றில்லை
வெயிலென்றில்லை
சிலவேளை
இருளிலும் கேட்கிறது
ட்ருக்கி ட்ருக்கி
எல்லா பிடுங்கல்களோடும்
எல்லா எக்களிப்போடும்
சேர்ந்துகொண்டது
ட்ருக்கி
என்னைப்பார்க்கையில்
என் குரல் கேட்கையில்
உங்களுக்குக் கேட்கிறதா
ட்ருக்கி

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...