புதன், அக்டோபர் 09, 2019

நினைக்கத் தெரிந்த மனமே

இன்னும் இதெல்லாம் தெரியாதா
என்ற கேள்வியைப் 
பூங்கொத்துபோலத் தலையசைத்துப் 
பெற்றுக்கொள்ளுங்கள்
நன்றி சொல்லுங்கள்
அதுதான் எதிர்மரியாதை
*******************************************
நீதானே சொன்னாய்
கேட்குமுன் ஒருதயக்கம்
வந்துவிட்டதா
வரட்டும்
நான் என்பது நீயாகவே இருந்த நாளில் 
சொன்னதை
எப்படி அப்படிக் கேட்பது

***************************************************
உணர்ச்சிபூர்வமாகப் பேசுவது 
இப்போது நாகரிக நடைமுறையில்லையாம்
குறிப்பாக
வலிகளை
வருத்தத்தை
நன்றியை
மறதியை...

ஆங்
நினைக்கத்தெரிந்த மனமே
பாட்டு ரொம்ப பழசாகிவிட்டது

***********************************************************
உன்னோடான பிணக்கு
எப்போது தீரும்
எப்படி எங்கே...
அதற்குள் என்னோடான
என் பிணக்காவது தீர்ந்தால் நல்லதுகருத்துகள் இல்லை:

ஆசுவாசம்

  என்னதான் ஆகிவிடுகிறது இந்த நேரத்திற்கு ருக்கு பெரியம்மா கால் வெற்றிலையும் காலே அரைக்கால் கொட்டைப் பாக்குமாக அதக்கிக் கொள்வாளே அந்த கா...