வியாழன், அக்டோபர் 10, 2019

எல்லாவற்றுக்கும் நிவர்த்தி

அச் அச்செனத் தும்மியபடி 
மிளகாய் வறுத்துக்கொண்டிருந்தவள்
உப்புக்கல்லை உடனிட்டு வறுத்தால்
அடக்கலாம் தும்மலை என்றறிந்தாள்
இறுக்கமான சோற்று உருண்டையில் 
இறங்கிக்கொள்ளுமாம்
குழம்பிலிட்ட கூடுதல் உப்பு
ஊளைமோரையும் கரைத்துச் 

செடியில் ஊற்றலாமாம்
எல்லாவற்றுக்கும் நிவர்த்தி தெரிகிறது
இவன் முகக்கோணலுக்குதான்.....

********************************************************
உனக்குப் புரியாது
என்றே
என் மொழியை
இழக்கிறேன்
தலையசைப்புகளுக்காவது
பதில்சொல்
எனக்குப் புரியாவிடினும்

**********************************************
மழை நின்றவுடன்
தண்மை நீங்குகிறது
வழித்துணைக்கு விடை கொடுப்பதாக
ஒற்றை இடி முற்றும் போடுகிறது



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...