வியாழன், செப்டம்பர் 24, 2020

கண்ணாடியில் தெரியாத வானவில்

 

கண்ணாடியின் ஓரத்தில்
சிறுதுண்டு வானவில்
மற்ற நீ எங்கே

***************************

 நெளிந்து நெளிந்து
இறங்கும் வெயில்
சற்றே படிக்கட்டில் இளைப்பாறுகிறது
அந்திமந்தாரை காத்திருக்கிறது

************************************* 

சிறுகுவியல் மணலுக்குள்
போய்ப்போய் அளைந்த
விரல்களை
பாப்பு
எங்காவது
பத்திரப்படுத்த
வேண்டுமாம்

************************************


 உன்திரையின் பின்னே
நீயும்
என் சன்னலில்
நானும்
பரல்கள் உருள்கின்றன நடுவீதியில்

********************************** 

நீ வரையாவிட்டால் என்ன
தீர்ந்தா போய்விடுகிறது
நெடுங்கோடு

**********************************

 பகலைப் பிழிந்த சாறு
தயாராகிறது
அவரவர் கோப்பை
அவரவர்க்கு

 

 

 

 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...