புன்னகையோடுதான் சொல்கிறீர்கள்
ஞாயிறு, செப்டம்பர் 20, 2020
அடையாள அட்டையில் புச்சுக்குட்டி
புகைப்படத்திலிருந்து ஒலிக்கும் குரல்
ஒருதலைராகம் நாயகிபோல
வி"கழுத்து வைத்த
ரவிக்கையுடன்
நால்வருமாக
முழங்கையோரம்
மறுகையைச் சார்த்திக்கொண்டு
நின்ற படம் இன்று கிடைத்தது
ஒற்றை மல்லிச்சரம்
கழுத்தில் வழிய
வீட்டில் எடுத்த மை
கண்ணுக்கு வெளியே இறங்க
சிரிக்கத்தெரியாமல்
புகைப்படம் எடுப்பவரையே
உற்றுப் பார்த்தபடி எடுத்த படம்
நீலாமட்டும்
பிளாஸ்டிக் மணிமாலையில்
ஸ்டுடியோகாரர் கைவசம்
மூன்று டாலர்சங்கிலி மட்டுமிருந்ததால்
எப்போதும்
எனக்கென்று வரும்போதுதான்
எதுவும் போதாமல் போய்விடுகிறது
அன்றைய புலம்பல் கோட்டா
அதுவாக முடிந்தது
-
போகன்வில்லாவில் படர்ந்த வயது
மீனின் தலையும்
மேசைக்கு வந்த பூமி
சின்ன வாழ்க்கைதான்
நாக்குட்டியா பூனைக்குட்டியா
அவை அப்படித்தான்
ஓட்டைப்பல் வெள்ளம்
அத்தனை வெளிச்சமும் சிரிப்புமான
பொழுதுக்குப்பின்
தேநீர் நேரம்
கொதித்துக் கொண்டிருக்கும்
தேநீரிலிருந்து
தப்ப விரும்பிய தூளை
நாளைய தேநீருக்காக
இறுக்கி மூடிவைத்தேன்
**********************************************************
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மயில் நீலச்சேலை. டிசைனர் ரவிக்கை, பொருத்தமாய்த்தேடிவாங்கிய அணிகலன்கள் , செருகிய பூச்சரமும் ஒப்பனைப்பூச்சுகளும் ... பொருத்தம...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
ஒரு சுபயோக ,சுபவேளை குறியுங்கள்! அவமானம், அவச்சொல் , தவிப்பு, புறக்கணிப்பு, புலம்பல்,இயலாமை சகலமும் துறக்க வேண்டும் ! இந்த இப்பிறவியின் ...