ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

மேசைக்கு வந்த பூமி

 சின்ன வாழ்க்கைதான்

எவ்வளவு சின்னதென்றால்
இதோ மச்சுப்படி இறங்கும்
அணில் கடித்த கொய்யா
அந்தப் பச்சைக்குள்ளான பழரோஸ்
ரோஸ் ஓரத்தில் ஏறிக் கொண்டிருக்கும் கொசு
அதற்கென்றுமொரு
சிறகு
அதில் உட்கார்ந்திருக்கிறது
பழிப்பு காட்டும் வாழ்க்கை

***************************************************
சின்ன மண்குவளையில்
தேநீர் தந்தான்
சுழலுமா என்றேன்
உங்களுக்காக நீங்களே எடுத்துச்சென்றால்
என்றான்
அப்படித்தான்
இந்தச் சின்னஞ்சிறு பூமி
என் மேசைக்கு வந்தது
இன்னொரு பூமி
வரும்வரை
இந்தாருங்கள் பீங்கான் குவளைத் தேநீர்

***********************************************
அலைபேசி நிறுவனங்களின்
நிதியோடு அழைக்கும் வங்கிகளின்
செலுத்த வேண்டிய பாக்கிகளின்
நினைவூட்டலில்
குறுஞ்செய்திப்பெட்டி நிரம்பி வழிகிறது
உன் செய்தி வந்தால்
...
அவசரமாக ஒழித்துக் கொண்டிருக்கிறேன்
சற்று தாமதமாக அனுப்பு

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...