ஒருமாதிரி என்று எச்சரிக்கப்பட்டவனைப் பார்க்க
என்ன மாதிரிப் போவது என்றும்
போகாமலே தவிர்க்கவும்
ஆலோசனைகள் வழங்கப்பட்டன
ஒரு மாதிரியாக இருக்காதே என்று
அவனுக்கு சொல்லிவைக்க
யாரும் பிறக்கவில்லையா
கவனமாக ஊக்கு குத்திக்கொண்ட
முந்தானையின் படபடப்பு என்னிடம் கேட்கிறது
தற்செயல் நகர்வுக்கு
சனியன் என்று திட்டுவாங்கும் எரிச்சல் அதற்கு
**************************************************
கிலோ அறுபது என்று வாங்கிய
கமலா ஆரஞ்சுகள்
கிலோ நாற்பதுக்குப்
போன வாரம் வாங்கிய கமலாப்பழங்களை விட
இனிப்பு சொட்டுகின்றன
கூடுதல்
நாளா
தொகையா
ரசமா
கிலோ நாற்பத்தைந்துக்கு
வந்த கொய்யா பதில் சொல்லாமல்
அழுத்தமாய் முறைக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக